Logo

Link1

Link2

link3

Poor Help

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு புத்தாடை

கிறிஸ்துமஸ் என்றாலே பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு புத்தாடை,கேக் மற்றும் வாணவேடிக்கையுடன் மது என்றாகிவிட்ட நிலையில் பண்ணைவிளை வாலிபர்கள் கடந்த வருடம் போல் இந்த ஆண்டும் 21.12.2008 ஞாயிறு ஆராதனையில் பண்ணைவிளை வாலிபர்கள் சார்பாக ஏழை எளியோர் 37பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையுள்ளவர்களுக்கு புத்தாடை சபையில்உள்ள பெரியவர்கள் கையினால் வழங்கப்பட்டது. கிறிஸ்துபிறப்பின் நற்செய்தி எளியவர்களுக்கும் செல்ல இது பெரிய சந்தோசமாக அமைந்தது.

சபைமக்களில் 14 பேரிடமிருந்து ரூ.6400 நன்கொடையாக பெறப்பட்டு இந்நற்காரியம் நிறைவேற்றப்பட்டது. நன்கொடை கொடுத்த சபை மக்களை கர்த்தர் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக!