|
|
பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம்

இந்தா, அந்தா என்று இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருந்த பொது இடங்களில்
புகைப்பிடித்தால் அபராதம் என்ற சட்டம் மத்திய சுகாதார மந்திரி டாக்டர்
அன்புமணி ராமதாசின் பகீரத பிரயத்தனத்துக்கு பின்ஒரு வழியாக மகாத்மா காந்தி
பிறந்த தினமான அக்டோபார் 2ம்தேதி நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது.
புகைப்பிடிக்கக்கூடாத இடங்கள் பற்றி விலாவாரியாக வெளியிடப்பட்டு
மீறுவோருக்கு 200 ருபாய் அபராதம் என்றும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் அமலான அன்று நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டனர்.
முதல்நாள் என்பதால் பலர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். சிலரிடம் கறாராக
அபராத தொகை வசூலும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஒரு சில நாட்கள் வரை புகைபிடிப்போர் கண்காணிக்கப்பட்டனர். ஆனால்,
மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததாலும், போதுமான கண்காணிப்பாளர்கள் இல்லாத
காரணத்தினாலும் புகைபிடித்தல் அபராத சட்டம் புகைபோல் மறைந்து
கரைந்துபோய்விட்டது.
புகைப்பழக்கம் மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு.... என்பதனை புரியாத
ஜென்மங்களுக்கு .... இங்கேயிருந்து புகைபிடிக்காதீர்கள் என்று சொல்வதற்காவது
இந்த சட்டம் உதவுகிறது.
|