
குன்னூர் : குன்னூர் தேவாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த "பைப் ஆர்கன்' என்ற இசைக்கருவி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நீலகிரியில், ஆங்கிலேயரால் விட்டு செல்லப்பட்ட பல பொருட்கள் இன்றும் பழமையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில், குன்னூர் பேரக்ஸ் பகுதியில் உள்ள புனித கேரிசன் தேவாலயத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் "பைப் ஆர்கன்' எனும் பியானோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இங்கிலாந்து இளவரசி விக்டோரியா மகாராணியின் நினைவாக, கடந்த 1900ம் ஆண்டு இந்த பைப் ஆர்கன் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது; 6 மீட்டர் உயரம், 4 மீட்டர் அகலத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இந்த பைப் ஆர்கன், தேவாலயங்களில் நடக்கும் ஆராதனைகளில் இசைக்கப்படுகின்றன. நூறு வயதை கடந்து விட்டாலும், அதில் இருந்து மிகத் தெளிவான, துல்லியமான இசையை இன்று வரை கேட்க முடிகிறது.
மின்சாரம் மற்றும் கம்ப்யூட்டரின் உதவியால் அதிர வைக்கும் இசையை அள்ளி தரும் இசைக் கருவிகளுக்கு மத்தியில் மின்சாரத்தின் உதவியில்லாமல் காற்று அழுத்தத்தின் உதவியுடன், முழுக்க, முழுக்க மனித ஆற்றல் மூலம் இசைக்கப்படும் இந்த இசைக்கருவி, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Copyright © 2007 - All Rights Reserved. Site Design & Maintained Webmaster
www.pannaivilai.net